எடப்பாடி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்குகிறேன் : ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கம் செய்யப்படுவதாக நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ் நீக்கம்
ஓபிஎஸ் மட்டுமின்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈபிஎஸ் நீக்கம்
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ் என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாறி மாறி அறிவித்துக்கொள்வது அதிமுக கட்சியினரிடையே குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது