DMK vs BJP..!! மணிப்பூருக்கு Flight Ticket போட்ட திமுக...வேங்கைவயலுக்கு பஸ் போட்ட பாஜக!!

M K Stalin Tamil nadu DMK BJP Narendra Modi
By Karthick Nov 07, 2023 12:02 PM GMT
Report

தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக இரு கட்சிகளுக்கிடையே தற்போது ஒருவர் மீது மற்றொருவர் முரணான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

திமுக - பாஜக

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகவும் - மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகாவிற்கும் முரணான போக்கே நீடித்து வருகின்றது. ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி குறை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அது பொதுக்கூட்டங்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, சமூகவலைத்தளங்கள் போன்றவற்றில் அதிகளவில் வெளிப்பட்டு வருகின்றது.

dmk-vs-bjp-twitter-fight-gets-heated

இந்நிலையில் தான் தற்போது சுவாரசியமான விஷயமொன்று அரங்கேறியுள்ளது. முதலில் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள டீவீட்டில், வேணும்ன்னா உங்க ஓனருக்கு மணிப்பூர்க்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்து தாரோம் போகச் சொல்லுய்யா.. என டிக்கெட் ஒன்றை பதிவிட்டுள்ளது.

அதன் தொடர்ந்து தற்போது பாஜக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாங்க உங்க ஓனருக்கு வேங்கைவயலுக்கு பஸ் டிக்கெட் எடுத்துட்டோம்! போய்ட்டு வந்திட சொல்லுங்க…!! என்று அவர்களும் டிக்கெட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தீவிரமாக தற்போது தமிழக அரசியலில் ஈடுபட்டு வரும் பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு திமுக எதிர்ப்பில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றது. அதன் தொடர்ச்சி தான் இந்த மோதல்கள் என்றும் கூறலாம்.

இந்த ஆடு நிறைய குட்டி போடும்.. அது கிடாக் குட்டிண்ணே..! அண்ணாமலை பயணத்தில் சுவாரஸ்யம்!

இந்த ஆடு நிறைய குட்டி போடும்.. அது கிடாக் குட்டிண்ணே..! அண்ணாமலை பயணத்தில் சுவாரஸ்யம்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், இது இன்னும் அதிகரிக்கலாம் என்றே தோன்றுகிறது.