எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்கணும்; அந்த விவகாரத்தில் ஜெயலலிதாவை பாராட்டணும் - உதயநிதி ஆவேசம்!

Udhayanidhi Stalin Tamil nadu DMK Ramanathapuram
By Jiyath Feb 18, 2024 07:30 AM GMT
Report

எழுதிக் கொடுப்பதை படிக்க வேண்டியதுதான் ஆளுநருடைய பொறுப்பு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொதுக்கூட்டம் 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்கணும்; அந்த விவகாரத்தில் ஜெயலலிதாவை பாராட்டணும் - உதயநிதி ஆவேசம்! | Dmk Udhayanidhi Stalin Speech In Ramanathapuram

அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது "தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும்.

எங்களுக்கு தேசிய கீதமும் முக்கியம், எங்களுடைய தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம். அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கழக நிகழ்ச்சிகளும் இனி தமிழ்த்தாய் வாழ்த்தோடுதான் ஆரம்பிக்கப்படும். எழுதிக் கொடுப்பதை படிக்க வேண்டியதுதான் ஆளுநருடைய பொறுப்பு. அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி கிடையாது. அவர் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.

எழுந்த விமர்சனங்கள் - கட்சி பெயரில் திடீர் மாற்றம் செய்த நடிகர் விஜய்!

எழுந்த விமர்சனங்கள் - கட்சி பெயரில் திடீர் மாற்றம் செய்த நடிகர் விஜய்!

பாராட்ட வேண்டும்

குடியரசுத் தலைவர் கூட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்டவர்" என்றார். மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் "புதிய கல்விக் கொள்கையில் 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள்.

எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்கணும்; அந்த விவகாரத்தில் ஜெயலலிதாவை பாராட்டணும் - உதயநிதி ஆவேசம்! | Dmk Udhayanidhi Stalin Speech In Ramanathapuram

நமது குழந்தைகள் படிக்கக் கூடாது என புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள். ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. நீட் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் மறைந்ததும், அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது.

நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட் தேர்வு விலக்கு ஏற்படுமோ, அதுதான் முதல் வெற்றி" என்று பேசியுள்ளார்.