திடீரென திமுகவுக்கு முருகன் மேல் பாசம் வர என்ன காரணம்? சீமான் கேள்வி!
திடீரென திமுகவுக்கு முருகன் மேல் பாசம் வர என்ன காரணம் என சீமான் கேட்டுள்ளார்.
முருகன்
ஆகஸ்ட் 24,25 ஆகிய நாட்களில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், “திடீரென திமுகவினருக்கு முருகன் கண்ணுக்கு வந்திருக்கிறார்.
முருகன் முப்பாட்டன் என நான் கூறிய போது என்னை விமர்சித்து முரசொலியில் கட்டுரை எழுதினர். கள் வேல் எடுத்தால் மட்டும் தமிழ்நாடு நாசமாகி விடுமா?திமுகவினரை யார் எதிர்த்தாலும், அவர்களை சங்கி என்று கூறுவதா?
சீமான் கேள்வி
திமுகவினரை எதிர்த்து யாராவது பேசினால், மோடிக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்று கூறுவதா?திடீரென முருகன் உங்கள் கண்ணுக்கு வருவதன் காரணம் என்ன..? தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களே இருப்பதால்,
ராமனை தொடர்ந்து முருகனை பயன்படுத்துகின்றனர். முத்துராமலிங்க தேவருக்கு தரும் மரியாதையை வேலு நாச்சியார் போன்றோருக்கு தருவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.