காவல் அதிகாரியை ஒருமையில் பேசிய சீமான் - FIR பதிவு செய்த போலீசார்!

Seeman Tamil Nadu Police trichy
By Vidhya Senthil Aug 05, 2024 07:20 AM GMT
Report

 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போலீஸ் ஆதிகாரிகள் குறித்து கொச்சை படுத்தி ஒருமையில் பேசியதாக திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சீமான் 

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் காளியம்மாளை விமர்சித்து சீமான் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த ஆடியோ சீமான் பேசியது கிடையாது என்றும் இது AI தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று  நாம் தமிழர்  கட்சியினர் மறுப்பு தெரித்தனர்.

காவல் அதிகாரியை ஒருமையில் பேசிய சீமான் - FIR பதிவு செய்த போலீசார்! | Seeman Controversy Speech About Trichy Sp

இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகத்தில் மின் கட்டணம் கடந்த ஜூலை மாதம் உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது பேசிய சீமான் என் மீது வழக்கு போடுவார்கள். முடிந்தால் வழக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.

என் செல்போனை எடுத்துப் பார்த்தால் திமுகவைப் பற்றி கொச்சையாக பேசிய ஆடியோக்கள் தான் உள்ளன. நான் பேசிய ஆடியோக்களை வெளியிடுங்கள் . ஐபிஎஸ் படித்து வருவது, எஸ்.பி, ஏசி, டிசி பணிக்கெல்லாம் வருவதற்கு எதற்காக.. சீமான் யாரிடம் என்ன பேசுகிறான் என்பதை வெளியிடுவதற்காகவா?

சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது பாய்ந்த வழக்கு - என்ன பின்னணி?

சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது பாய்ந்த வழக்கு - என்ன பின்னணி?

 சர்ச்சை  பேச்சு

இதெல்லாம் உங்கள் வேலையா? திடீரென காளியம்மாள் மீது இவர்களுக்கு என்ன பாசம். மயிலாடுதுறையில் காளியம்மாள் போட்டியிட்ட போது,போய் வேலை செய்துவிட்டு இதுகுறித்து பேசியிருக்கலாமே.. நாங்கள் காளியம்மாளை பிசிறு என்போம், பிறகு உருசு என்போம். இது எங்கள் கட்சியின் பிரச்னை.

 I have already served him a criminal defamation notice thru my lawyer. I will pursue him in the courts of law for all his false averments. I have full faith in democracy & the Courts. People of Tamil Nadu will not tolerate crass and sleazy lies, even if spoken on a public stage.

அதில் உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போலீஸ் ஆதிகாரிகள் குறித்து கொச்சை படுத்தி ஒருமையில் பேசியதாக திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

அதில், சீமான் பேசியது குறித்து அநாகரீகமானது ன்.ஜனநாயகம் மற்றும் நீதிமன்றங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பொது மேடையில் பேசினாலும், கொச்சையான பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.என்று தெரிவித்துள்ளார்.