காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்து - ராஜகண்ணப்பனை கண்டிக்கணும் - சீறும் கே.எஸ்.அழகிரி..!

Indian National Congress M K Stalin DMK
By Karthick Jan 30, 2024 10:36 AM GMT
Report

சில தினங்கள் முன்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசிய கருத்துக்கள் குறித்த வைரலாகின.

ராஜகண்ணப்பன் கருத்து

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் அண்மையில், சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் கட்சி நடத்தப்படுகிறது விமர்சித்து பேசியிருந்தார்.

dmk-should-warn-rajakanappan-urges-ks-azhagiri

மேலும், அதில் என்ன பிரயோஜனம் என்றும் மக்களுக்காக உழைக்கணும் என்று தெரிவித்த அவர், மக்களுக்கு நல்லது செய்யனும்'னு காங்கிரஸ் கட்சி நடத்துறது இல்லை என தெரிவித்திருந்தார். இந்த வீடியோக்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் அதிருப்தி வெளிப்பட்டு வருகின்றது.

கண்டிக்கணும்...

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, ஒரு தொகுதியில் ஒரே கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டால் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு இருக்காது என்பதை சுட்டிக்காட்டி,

dmk-should-warn-rajakanappan-urges-ks-azhagiri

சென்னையில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா.? காங்கிரசுக்கு பெற்று தாருங்கள் என நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

சீட் வாங்க மட்டும் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது..! திமுக அமைச்சரின் கருத்தால் சர்ச்சை..!

சீட் வாங்க மட்டும் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது..! திமுக அமைச்சரின் கருத்தால் சர்ச்சை..!

மேலும், சென்னையில் போட்டியிட வாய்ப்பு பெற்று தருவதாக நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறி, அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் என தெரிவித்து சென்றார்.