விஜய்யின் மாநாடு..இது நடந்திடுமோ என்று திமுக அரசிற்கு அச்சம் - அமைச்சர் முருகன்!

Vijay DMK BJP Thamizhaga Vetri Kazhagam
By Swetha Sep 23, 2024 04:19 AM GMT
Report

விஜய்யின் மாநாடு தாக்கத்தை ஏற்படுத்திவிடுமோ என்று திமுக அஞ்சுவதாக முருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் முருகன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் வெற்றி பெற்ற, 70 குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் நடைபெற்றது.

விஜய்யின் மாநாடு..இது நடந்திடுமோ என்று திமுக அரசிற்கு அச்சம் - அமைச்சர் முருகன்! | Dmk Scared Of Vijay Conference Impact Says Murugan

இதில் மத்திய இணை அமைச்சர் முருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் உள்ள உயர்ந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்து, திருப்பதி பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் மாநாட்டில் நான் பங்கேற்றால் நன்றாக இருக்காது - சீமான் பேச்சு

விஜய் மாநாட்டில் நான் பங்கேற்றால் நன்றாக இருக்காது - சீமான் பேச்சு

விஜய் மாநாடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளார்.முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், கோவில் நிர்வாகத்துடன் தொடர்பில்லாத மாற்று மதத்தினரை அறங்காவலராக நியமனம் செய்தது தான்,

விஜய்யின் மாநாடு..இது நடந்திடுமோ என்று திமுக அரசிற்கு அச்சம் - அமைச்சர் முருகன்! | Dmk Scared Of Vijay Conference Impact Says Murugan

இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம். நடிகர் விஜய் கட்சி மாநாடு, தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம், தி.மு.க., அரசிற்கு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசு,

வேறு எந்தக் கட்சியும் வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. என்று தெரிவித்துள்ளார்.