அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக..அதைதான் அரசு செய்கிறது - ஜெயக்குமார் சாடல்!

Tamil nadu DMK D. Jayakumar
By Swetha Aug 16, 2024 12:30 PM GMT
Report

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் 

அதிமுக செயற்குழு கூட்ட ம் இன்று காலை நடைபெற்றது. அதன் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது, புதுமையாக திட்டங்களை யோசிக்க,

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக..அதைதான் அரசு செய்கிறது - ஜெயக்குமார் சாடல்! | Dmk Puts Sticker On Aiadmk Project Says Jayakumar

தெரியாமல் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றி கொள்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் மூடுவிழா நடக்கிறது. அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மட்டுமே திமுக அரசு செய்கிறது.

நானும் காசிமேடு தான் கொச்சையா பேச எனக்கு தெரியாதா..? கொந்தளித்த ஜெயக்குமார்

நானும் காசிமேடு தான் கொச்சையா பேச எனக்கு தெரியாதா..? கொந்தளித்த ஜெயக்குமார்

அதிமுக திட்டம்..

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது; அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. திமுக ஆட்சியில் விலைவாசி, வரி உயர்வு, மின் கட்டணம் உயர்ந்துள்ளது.அம்மா உணவகங்களை திமுக அரசு நீர்த்து போக செய்துள்ளது.

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக..அதைதான் அரசு செய்கிறது - ஜெயக்குமார் சாடல்! | Dmk Puts Sticker On Aiadmk Project Says Jayakumar

அம்மா சிமெண்ட்டை வலிமை சிமெண்ட் என மாற்றினார்கள். அம்மா மருந்தகங்களை மூடி விட்டு முதல்வர் மருந்தகங்களை தொடங்குகின்றனர். தமிழகம் முழுவதும் விரைவில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.