இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்.
திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என உதயநிதி அறிவித்துள்ளார்.
இந்திய ஒன்றியத்தின் பன்மைத்துவத்தை சீர்குலைத்து, ஒரே மொழி-ஒரே தேர்வு செயல் திட்டங்களால், மொழி-கல்வி உரிமையை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் பாசிச போக்கை, ஆதிக்கத்தை வீழ்த்திய திராவிட இயக்க இளம் தலைமுறையாய், இந்தி திணிப்பு-பொது நுழைவு தேர்வுக்கு எதிராக அணி திரண்டு வெல்வோம்,வாரீர். pic.twitter.com/2d6iSQX1pN
— Udhay (@Udhaystalin) October 12, 2022