‘இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்...’ - உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக மாநிலங்கள் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில மொழிகள் பற்றிய உரிமை குறித்து பல்வேறு நபர்களும் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறுகையில், உள்துறை அமைச்சரே உங்களின் இந்தித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களின் பன்முகத்தன்மையை விரும்புகிறோம். எங்கள் தாய்மொழியையும், அடையாளத்தையும் நேசிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.