இன்று வெளியாகும் வேட்பாளர்கள் பட்டியல் - கவனம் பெரும் திமுக உத்தேச பட்டியல்
மக்களவை தேர்தலில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்.
திமுக கூட்டணி
தமிழகத்தில் தற்போது வரை மிகவும் வலுவான கூட்டணியாக உள்ளது திமுக தலைமையிலான கூட்டணி. திமுக , காங்கிரஸ்,விசிக, இடதுசாரிகள், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பல கட்சிகள் இடம்பிடித்துள்ளது.
இதில் திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 (தமிழகம் 9 + புதுச்சேரி 1), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் கம்யூனிஸ்ட், விசிக தலா 2, மதிமுக, இந்தியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி தலா 1 இடங்களில் போட்டியிடுகிறார்கள்.
திமுக நேரடியாக 21 தொகுதிகளில் அதாவது, வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, ஈரோடு, கோவை, தேனி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தஞ்சை, தேனி, தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதிகளில் போட்டியிடுகிறது.
உத்தேச பட்டியல்
இன்று திமுகவின் வேட்பாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைக்க இருக்கும் நிலையில், 14 உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் ஒன்று வெளிவந்துள்ளது. அந்த பட்டியலின்படி,
வட சென்னை- கலாநிதி வீராசாமி
மத்திய சென்னை- தயாநிதி மாறன்
தென் சென்னை-தமிழச்சி தங்கப்பாண்டியன்
ஸ்ரீ பெரும்புதூர்-டி.ஆர்.பாலு
அரக்கோணம்- ஜெகத்தரட்சகன்
காஞ்சிபுரம்- செல்வம்
திருவண்ணாமலை-அண்ணாதுரை
வேலூர்- கதிர் ஆனந்த்
தூத்துக்குடி-கனிமொழி
தஞ்சாவூர்-பழனிமாணிக்கம்
பொள்ளாச்சி- சண்முகசுந்தரம்
கள்ளக்குறிச்சி- கவுதம சிகாமணி
தருமபுரி-செந்தில்குமார்
நீலகிரி-ஆ.ராசா