பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக பிரமுகர் - அதிரடி கைது!
பட்டியலின இளைஞரை ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை மிரட்டல்
சேலம் மேற்கு வட்டத்தில் உள்ள திருமலைகிரி கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பிரவீன் என்பவர் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
இதனை அறிந்த சாதியவாதிகள், பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர் கோயிலுக்குள் சென்றதால் கோயில் தீட்டாகிவிடும் என்றும், சாதிய இந்திக்களாகிய நாங்கள் கோயிலுக்குள் வரமாட்டோம் எனவும் தெரிவித்ததாக கூறி ஒன்றிய திமுக செயலாளரும் திருமலைகிரி
கைது
ஊராட்சி மன்ற தலைவருமான டி.மாணிக்கம் என்பவர் கடந்த 27ம் தேதி கிராம் மக்கள் முன்னிலையில் இளைஞரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில்,
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒன்றிய செயலாளரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் இதுகுறித்து புகார் அளித்ததின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாணிக்கத்தை கைது செய்துள்ளனர்.