பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் - சஸ்பெண்ட் செய்த துரைமுருகன்

Tamil nadu DMK Durai Murugan
By Thahir Jan 30, 2023 10:20 AM GMT
Report

கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்று கூறிய பட்டியலின இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் அவரை கட்சியிலிருந்து துரைமுருகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இளைஞரை ஆபாசமாக பேசிய திமுக ஒன்றிய செயலாளர் 

சேலம் மேற்கு வட்டத்தில் உள்ள திருமலைகிரி கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பிரவீன் என்பவர் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

dmk-executive-suspended-for-speaking-obscenely

இதனை அறிந்த சாதியவாதிகள், பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர் கோயிலுக்குள் சென்றதால் கோயில் தீட்டாகிவிடும் என்றும், சாதிய இந்திக்களாகிய நாங்கள் கோயிலுக்குள் வரமாட்டோம் எனவும் தெரிவித்ததாக கூறி ஒன்றிய திமுக செயலாளரும் திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான டி.மாணிக்கம் என்பவர் கடந்த 27ம் தேதி கிராம் மக்கள் முன்னிலையில் இளைஞரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கட்சியிலிருந்து சஸ்பெண்ட் 

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், திமுக பொதுச்செயலாளர் ஒன்றிய செயலாளரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

dmk-executive-suspended-for-speaking-obscenely

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் டி.மாணிக்கம் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவவ்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார் என்று அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.