இந்தியாவையே ஆட்டம்காட்ட கூடிய பெரிய ஸ்கேமுக்கு பாஜக ரெடியாகுது - பத்ம பிரியா கொந்தளிப்பு
திமுகவின் பத்ம பிரியா, பாஜக ஸ்கேம் செய்யவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 என்பதை 31 ஆக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தமிழ்நாடு 8 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்கும் எனக் கூறப்படுகிறது.
இதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலி கண்டனம் தெரிவித்து, அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்ம பிரியா, இந்தியாவையே உலுக்கக்கூடிய மிகப்பெரிய ஸ்கேமுக்கு ரெடியாகுது ஒன்றிய பாஜக அரசு.
தமிழ்நாடு மாதிரியான தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை பறிப்பதுடன், இன்னொரு முறை எதிர்த்து பேசினாலும் அந்த குரலுக்கு பவர் கிடையாது அப்படீன்ற அளவுக்கு மக்களவை தொகுதி மறுவரையறையை கையில் எடுத்துள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் எவ்வளவு எம்பி சீட் கிடைக்கும் என்பதை மக்கள் தொகையை அடிப்படையாக முடிவெடுக்க போகிறது.
பத்ம பிரியா கண்டனம்
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு மக்கள் தொகையை குறையுங்கள் என்று மத்திய அரசு கூறியது. அதன்படி தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகையை குறைப்பதை சரியாக செய்தார்கள். முக்கியமாக தமிழ்நாடு மாதிரியான மாநிலங்கள் செய்ததால், இன்றைக்கு நம்முடைய பிறப்பு விகிதம் 1.8 ஆக உள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகார் மாதிரியான மாநிலங்களில் 2.3 ஆக இருக்கிறது. ஆனால் நீங்கள் சொன்னதை கேட்டு நடந்ததால் என்ன நடந்திருக்கு பாருங்க. ஒட்டுமொத்த இந்தியாவையும் உங்கக்கிட்ட இருக்குற மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கிற நீங்க, அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உங்கள் சைடுநீங்கள் அதிகரித்துக் கொண்டால்,
தென்னிந்தியா எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியுமா? வெறும் பால் கரக்குற மாடு மாதிரி, வெறும் டேக்ஸ் கறக்குற மாடு மாதிரி தானே பயன்படுத்துவீங்க. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே குரல் கொடுத்து விட்டார். இனிமே பற்றிக்கொள்ளும் காட்டுத்தீ போல். ஆனால் இப்படி ஒன்று நடக்கிறது என்பதை மக்களாகிய நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.