நாங்க தவெக-வை கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே - விஜய்க்கு அமைச்சர் பதிலடி!
தவெகவை, திமுக கூட்டணிக்கு அழைக்கவில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
விஜய் பேச்சு
சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய்,
திமுக - பாஜகவுடன் எப்போதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ தவெக கூட்டணி வைத்துக் கொள்ளாது என அறிவித்தார். இந்நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு,
அமைச்சர் கிண்டல்
'விஜய் கட்சியை கூட்டணிக்கு வாங்கன்னு நாங்க கூப்பிடவே இல்லையே' என நக்கலடித்தார். முன்னதாக இதுதொடர்பாக பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி,
"தவெக தனித்து தேர்தலில் போட்டியிடுவது திமுகவுக்கு சவாலாக இல்லை. தவெகவும் பாஜகவும் தான் ஒருவருக்கொருவர் சவாலாக இருக்கலாம்.
பலர் தனித்துப் போட்டியிடலாம், அது அவர்களது தேர்வு. அதற்காக திமுக கூட்டணிக்கு வெற்றியில் பாதிப்பு ஏற்படாது. மக்கள் தரும் ஆதரவை பார்க்கும் போது திமுக கூட்டணி முன்னணியில் இருப்பது தெளிவாக தெரிகிறது" என கூறியுள்ளார்.