விஜய்யின் தவெக உடன் பாமக கூட்டணி? ராமதாஸ் பரபர விளக்கம்

Vijay Dr. S. Ramadoss Tamil nadu PMK Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Jun 12, 2025 08:30 AM GMT
Report

விஜய்யின் தவெக உடன் பாமக கூட்டணியா என்ற கேள்விக்கு ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

தவெகவுடன் கூட்டணி

பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2026 தேர்தல் வரை பாமக-வின் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன், 2026 தேர்தலுக்கு பிறகு அனைத்தையும் அன்புமணி வாரிக்கொண்டு செல்லட்டும்.

vijay - ramadoss

பாமக-வில் கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன். எதிர்காலத்தில் தவெக-வுடன் பேசுவது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கவலையே அதுதான்; திமுக கூட்டணியில் எந்த கட்சியும் வெளியேறாது - திருமா உறுதி

பாஜகவின் கவலையே அதுதான்; திமுக கூட்டணியில் எந்த கட்சியும் வெளியேறாது - திருமா உறுதி

ராமதாஸ் விளக்கம்

இதற்கிடையில் அதிமுக - பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. பாஜகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த தேமுதிக ஆகிய கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக உள்ளது.

விஜய்யின் தவெக உடன் பாமக கூட்டணி? ராமதாஸ் பரபர விளக்கம் | Amadoss Responds To Alliance With Tvk Vijay

நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது. விஜய்யின் தவெகவுடன் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.