CISF காவலர்களால் திமுக எம்.பிக்கு நேர்ந்த அவமானம் - நடவடிக்கை கோரி கடிதம்!

All India Trinamool Congress DMK
By Karthikraja Jun 19, 2024 07:32 AM GMT
Report

சிஐஎஸ்எப் பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி அப்துல்லா கடிதம் எழுதியுள்ளார்.

திமுக எம்.பி அப்துல்லா

நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று (18.06.2024) சென்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா சென்ற பொது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த CISF பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். 

dmk mp m.m,abdulla

இது குறித்து நடவடிக்கை கோரி துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு திமுக எம்.பி அப்துல்லா கடிதம் எழுதினார்.

கடிதத்தில் கூறியதாவது, நேற்று (18.06.2024) பிற்பகல் 3 மணியளவில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, அங்கு பணியில் இருந்த CISF அதிகாரிகள் என்னை தடுத்து நிறுத்தி நாடாளுமன்றத்துக்கு என்ன காரணத்திற்காக வந்துளீர்கள், என்ன நோக்கம் என விளக்கம் அளிக்க வேண்டும் என பணியில் இருந்த CISF பாதுகாவலர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். 

Lok Sabha அத்துமீறல் - வெளியான தீவிரவாத மிரட்டல்..! காலிஸ்தான் தொடர்பா..?

Lok Sabha அத்துமீறல் - வெளியான தீவிரவாத மிரட்டல்..! காலிஸ்தான் தொடர்பா..?

CISF பாதுகாவலர்கள்

மேலும், “தமிழ்நாடு மக்கள் மற்றும் மாநில அரசின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் உள்ள ஒருவரிடம், CISF பாதுகாவலர்களின் இத்தகைய நடத்தை தவறான ஒன்று. நாடாளுமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற பாதுகாவலர்கள் (PSS) பாதுகாப்புப் பணியில் இருந்தபோது இதுபோன்ற தவறான நடத்தை இதற்கு முன்பு நடந்ததில்லை. ஆனால் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள CISF பாதுகாவலர்களின் செயல்பாடுகள் மிகுந்த வருத்ததை அளிக்கிறது ” எனக் கூறியுள்ளார். 

dmk mm abdulla letter about cisf

மேலும், தன்னிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட CISF பணியாளர்கள் மற்றும் தவறிழைத்த அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநிலங்களவை உறுப்பினர்களின் கண்ணியத்தையும் உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்

அப்துல்லாவுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே ஒரு எம்.பி., எதற்காக பார்லிமென்ட் செல்கிறீர்கள் என்று கேட்க முடியாது. நாடாளுமன்றத்தில் இருப்பது எங்களின் உரிமை. 

இதற்காகவா PSS க்கு பதிலாக CISF பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டது? பாராளுமன்றம் என்பது மோடி அல்லது ஷாவின் தனிப்பட்ட சொத்து அல்ல, அவர்கள் எம்பிக்களை நிறுத்தி விசாரிக்க முடியும். இதற்கு பதில் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் அமித்ஷாவின் தனிப்பட்ட போராளிகளாக அல்ல, பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக இருக்கிறீர்கள். என தெரிவித்துள்ளார்.

கடந்த 6 டிசம்பர் 2023 அன்று பாராளுமன்றத்துக்குள் அத்துமீறி உட்புகுந்த நபர்கள் புகை குப்பியை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக CISF நாடாளுமன்ற பாதுகாப்பை தன் கட்டுக்குள் எடுத்துக்கொண்டது.