3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அரசு சலுகை - திமுக எம்எல்ஏ பரபரப்பு கோரிக்கை
3 வது குழந்தை பெற்றுக் கொள்ள அரசு சலுகை வழங்க திமுக உறுப்பினர் மதியழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
3 வது குழந்தை
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாள் விவாதம் நடைபெற்றது. இதில், மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்த துடிக்கும் தொகுதி மறுசீரமைப்பால்,
மக்கள் தொகை அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்படும் என்பதால் தமிழகத்தில் மக்கள் தொகையை அதிகப்படுத்தவேண்டும். அதற்காக 3வது குழந்தையை தம்பதியினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எம்எல்ஏ கோரிக்கை
3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கும் தமிழ்நாடு அரசு சலுகை அளிக்க வேண்டும் என்று திமுக பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ மதியழகன் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக மக்கள் தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என முதலமைச்சர் பேசியிருந்த நிலையில், மதியழகன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.