திமுக எம்.எல்.ஏ எபினேசர் மீது அதிருப்தி - மீண்டும் வாய்ப்பில்லை என்று சொன்ன அறிவாலயம்!

DMK Chennai
By Sumathi Jul 30, 2025 07:23 AM GMT
Report

வடசென்னை - முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா தொகுதி - அமுமுக செயலாளர் T.T.V.தினகாரனின் 20 ரூபாய் டோக்கன் என பல்வேறு வகையிலும் அறியப்படும் ஆர்.கே.நகர் தொகுதியில் யாருக்குச் சீட்டு,

ஆர்.கே.நகர் தொகுதி

ஆளும் கட்சியில் நடக்கும் போட்டா போட்டி. இது ஒரு வி.ஐ.பி. தொகுதி என்று கூட கூறலாம். சென்னையின் Dr. Radhakrishnan Nagar (ஆர்.கே.நகர்) சட்டமன்றத் தொகுதி என்பது முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவை சார்ந்து கொண்ட தொகுதியாகும்.

dmk ebanesr mla

வட சென்னைக்கே உரிய வளர்ச்சியடையாத, மழைக்காலத்தில் வெள்ளமாகவும், கோடையில் தண்ணீர் லாரிக்கு காத்திருக்கும் நிலையும், குறுகிய சாலைகள், முறையற்ற பாளாதசாக்கடை கொண்டுள்ள அவலம், கல்வி நிலையங்கள் இல்லாத, வேலைவாய்ப்பிற்கும் பிற பகுதிகளை சார்ந்துள்ள பின்தங்கிய தொகுதியாகும் இந்த ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாடார், வன்னியர், பட்டியலின மக்கள், முஸ்லிம், கிறிஸ்துவர்களும் மற்றும் பிற சமுதாயத்தினரும் பரவலாக இருப்பதுடன், தெலுங்கு மொழி பேசும் மக்களும் கணிசமாக அளவில் வசித்துவருகின்றனர். மேலும், மீனவர்கள் அதிகம் வசிக்கும் காசிமேடு பகுதியும் இந்த தொகுதியில் இருக்கின்றது.

நட்சத்திர தொகுதி

ஆர்.கே.நகர் தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் இல்லை; இங்கு வியாபாரம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பல பகுதிகளில் சாலைகள் குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

arivalayam

மேலும், அவ்வப்போது குடிநீரில் கச்சா எண்ணையும், கழிவு நீரும் கலப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த தொகுதியின் அரசியல் ரீதியிலான சிறப்பு என்பது மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் தனிக்கட்சி தொடங்கி அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத் தொகுதிகளில் திமுகவின் ஆதிக்கத்தைக் கடைசி வரை அவரால் அசைக்கமுடியவில்லை.

அவருக்குப் பின் வந்த ஜெயலலிதாவின் காலத்தில் சென்னையில் முதல் தொகுதியாக வெற்றி பெற்றது. காரணம் திமுக வேட்பாளர்களிடம் இருந்து அதிமுக தட்டிப்பறித்த முதல் தொகுதி இந்த ஆர்.கே.நகர் தொகுதியாகும். இந்த தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த வெற்றிவேல், ஜெயலலிதா போட்டியிடுவதற்காகவே தனது எம்.எல்.ஏ. பதவியை அப்போது ராஜினாமா செய்தார்.

2015 ஜூன் மாதம் 27-ந்தேதி ஆர்.கே.நகர். தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது தி.மு.க. தேர்தலைப் புறக்கணித்தது. தொடர்ந்து, பெரியளவில் கவனம் பெறாமல் இருந்துவந்த தொகுதி கடந்த 2015ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டதால், ஒரே நாளில் தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதியானது.

 திமுக- எபினேசர்

ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களம் இறங்கி பணியாற்றியது. சென்னை வெள்ளத்தில் பெரிதளவில் பாதிக்கப்பட்டும், தொடர்ந்து மக்களைச் சந்தித்த ஜெயலலிதா அன்புள்ள வாக்காள பெருமக்களே என்றது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும் ஜெயலலிதா மீண்டும் இங்குப் போட்டியிட்டு எளிதில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தமிழக முதல்வர் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அவரின் மறைவிற்குப் பிறகு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் டி.டி.வி., தினகரன் வேட்பாளராக வலம்வந்து அதிகளவில் பணம் வாரியிறைக்கப்பட்ட புகாரால் இடைத்தேர்தல் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட வரலாற்றைக் கொண்ட தொகுதி. மீண்டும் தேர்தல் வந்தபோது காட்சிகள் மாறின,

ஆளும் கட்சி வேறு ஒருவரை வேட்பாளராக்க, எதிர்க்கட்சியான திமுக கடைநிலை தொண்டருக்கு வாய்ப்பளித்தது, தனித்து சுயேட்ச்சை வேட்பாளராக களம்கண்ட தினகரன் மக்களுக்குப் பணம் வழங்குவதாக 20 ரூபாய் மட்டும் டோக்கணாக கொடுத்து மொத்த மக்கள்- அரசை ஏமாற்றி வென்றது குறிப்பிடத்தக்கது.

கடும் அதிருப்தி

கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சுயேட்ச்சையாக ஒருவர் வென்றதும், திமுக டெப்பாசிட் தொகையை இழந்ததும் அப்போது தான். இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் யாரும் எதிர் பார்க்காத விதமாக திமுக சார்பில் நிறுத்தப்பட்ட எபினேசர் வெற்றி பெற்றார். தொடக்கத்தில் தொகுதியில் சுறுசுறுப்பாகச் சுற்றி வந்தாலும், திமுக இளைஞரணியில் ஒரு நல்ல பதவி கிடைத்தவுடன் எபினேசர் தொகுதியை முற்றாக மறந்தே விட்டார் என்கின்றனர் திமுகவினர்.

வெறும் அரசு நிகழ்ச்சிகள், அமைச்சர்கள் பங்கேற்றும் கூட்டங்கள் அல்லது திட்ட நிகழ்வுகளில் மட்டுமே தலைகாட்டுவதாக அவரின் மீது புகார்கள் அதிகரித்து வருகிறது. எபினேசர் சட்டமன்ற உறுப்பினராக ஆனவுடன் கட்சியில் உள்ள கீழ் மட்ட நிர்வாகிகளை சுத்தமாக கண்டுகொள்வதில்லை மற்றும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மேலும், பொது இடத்தில் ஒருமையில் பேசுவதும், இவருடைய செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக தெரிகின்றது. சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், திமுக வட்ட செயலாளர்கள், ஆர்.கே.நகர் தொகுதி சார்ந்த மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் எபினேசர் மீது அதிருப்தியில் உள்ளனர்.

மீண்டும் வாய்ப்பில்லை..

 இந்த தொகுதிக்கு, அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜே.ராஜேஷ் வேட்பாளர் என்பது ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்ட ஒன்று. திமுக சார்பில் ஆர் .கே. நகர் மேற்கு பகுதி செயலாளர் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள இவர், அனைவரையும் அனுசரித்துச் செல்ல கூடிய நபராககவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குட் பூக்கில் இடம்பெற்றுள்ளர் உள்ளார் என்று கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. கடந்த தேர்தலில் எஸ்.ஜெபதாஸ் பாண்டியனுக்கும், எபினேசர் இடையே தான் சீட் கிடைப்பதில் கடும் போட்டி நிலவியது.

முன்னாள் வேட்பாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மருது கணேஷ் போட்டியிட வாய்ப்புள்ளாத தெரிகிறது. தொகுதி எம்.எல்.ஏ எபினேசர் மீது ஏகப்பட்ட அதிருப்தியில் இருக்கும் மக்களை சரிப்படுத்த வேட்பாளர் மாற்றம் என்பது திமுக சார்பில் தெளிவாக இருக்கிறது. எம்.எல்.ஏ.,எபினேசர்க்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கினால், வெற்றி பெற முடியாது என்று தலைமைக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.