சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தல் என்ன'னு அண்ணாமலைக்கு தெரியுமா..? மனோ தங்கராஜ் காட்டம்
நேற்று அறிவிக்கப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டிருந்தார்.
அண்ணாமலைக்கு தெரியுமா...?
இது குறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசியது வருமாறு,
சட்டமன்ற தேர்தல் அறிக்கையை போலவே நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையும் இருப்பதாக விமர்சிக்கும் அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன? பாராளுமன்ற தேர்தல் என்றால் என்னவென்று தெரியாது என சாடினார்.
சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் அவர் சென்றதில்லை என்று கூறி அங்கே நடைபெறும் பணிகளையும் அண்ணாமலை கவனித்தது கிடையாது என்று விமர்சித்தார்.
பேசவேண்டும் என்பதற்காக..
10 ஆண்டு கால ஆட்சியில் கேஸ், பெட்ரோல் விலையை, உயர்த்தி நாட்டு மக்களை மோடி அரசு வஞ்சித்தது, இந்தியா கூட்டணியில் பெட்ரோல் விலை பாதியாகவும், கேஸ் விலையை 500 ரூபாய்க்கும் குறைப்போம் என்று சொல்லி இருக்கின்றோம்.
இதே போல அடுத்த அறிவிப்புகளை சுட்டிக்காட்டி, இவ்வாறான அற்புதமான திட்டங்களை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியாக அளித்துள்ளோம் என்று கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ் இது கூட தெரியாமல் ஒருவர் கட்சி நடத்துகிறாரா? இல்லை பேசவேண்டும் என்பதற்காக பொய்யை புழுகி விட்டுக் கொண்டிருக்கிறார்களா? என்பதே கேள்வி என்றார்.