அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் ED ரெய்டு - பரபரப்பு!
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளவர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அமைச்சர் பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவருக்கு சொந்தமான சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களிலும் சோதனை நடந்து வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தெரியவருகிறது.
ED ரெய்டு
இவர் கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த அதிகாரிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக ஐ.பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட போதிலும் அண்மையில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல் IBC Tamil

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
