திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் - ஒரே மாதத்தில் 3 பேர்!
மைத்ரேயன் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
மைத்ரேயன்-திமுக
அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருக்கும் நிலையில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியால் வலுவாக இருந்த தொகுதிகளில் கூட பல முன்னாள் அமைச்சர்கள் தோல்வியை சந்தித்தனர்.
தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சரும் சிறுபான்மை தலைவர்களில் முக்கியமானவருமான அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த சில தினங்களிலேயே அவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது.
ஸ்டாலின் வரவேற்பு
இந்நிலையில், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்பியுமான மைத்ரேயன் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அவரை பொன்னாடை போர்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
அவருடன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் புதுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமானும் திமுகவில் இணைந்த நிலையில், ஒரே மாதத்தில் அதிமுகவில் இருந்து திமுகவில் 3 பேர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.