பெண் காவலருக்கு பாலியல் சீண்டல், போலீஸிடமே வாலாட்டிய திமுக நிர்வாகி - அதிகாரிகள் அதிரடி!
பெண் போலீசிடம் திமுக நிர்வாகி ஒருவர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு பணி
சென்னை, ராமாபுரம், திருவள்ளுவர் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. அங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. அதற்கு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர், இதில் ராமாபுரம் உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது திருவிழாவிற்கு வந்த ஒருவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயது பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன பெண் உதவி ஆய்வாளர் கோபால் என்பவரிடம் சென்று நடந்ததை கூறினார்.
திமுக நிர்வாகி
இந்நிலையில், போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த நபரை ராமாபுரம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கார் மெக்கானிக் கண்ணன் (51) என்பதும், இவர் திமுக கட்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல்,
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கண்ணனை போலீஸார் கைது செய்தனர். இதில் அந்த பெண் போலீசார் புகாரளிக்க மறுப்பு தெரிவித்தபோதிலும், உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.