பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை..! திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்
இளைஞர் அணி நிர்வாகிகள் எஸ்.பிரவீன் மற்றும் சி.ஏகாம்பரம் ஆகியோர் திமுகவில் இருந்து நீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்
சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், எஸ்.பிரவீன் மற்றும் சி.ஏகாம்பரம் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால்,
அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில், பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.