மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு)

Vijay Tamil nadu ADMK DMK
By Sumathi Jul 16, 2025 05:36 AM GMT
Report

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'வோட் வைப்' என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.

தேர்தல் கருத்து கணிப்பு

அதில், 37% பேர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேசமயம், அதிமுக- பாஜக கூட்டணி 32% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) | Dmk Majority Support Against Aiadmk Election 2026

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (டி.வி.கே) கட்சி, தற்போது மூன்றாவது விருப்பமாக வேகமாக வளர்ந்து வருகிறது. அதிமுக- பாஜக கூட்டணி 2026 தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை பார்க்க முடிகிறது.

பாஜக இல்லையென்றால் திமுக எப்பவோ அழிஞ்சிருக்கும் - சீமான் அட்டாக்

பாஜக இல்லையென்றால் திமுக எப்பவோ அழிஞ்சிருக்கும் - சீமான் அட்டாக்

மீண்டும் திமுக

இதில் நீட் தேர்வு ரத்து (11%), இந்தி மொழி (7%), தமிழ்ப் பெருமை (6%) மற்றும் தொகுதி மறுசீரமைப்பு (5%) போன்ற உணர்ச்சிகரமான பிரச்சினைகளும் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) | Dmk Majority Support Against Aiadmk Election 2026

பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு செப்டம்பர் 2024-ல் பதிவு செய்யப்பட்ட தவெக கட்சிக்கு 12% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.