தென் மாவட்டங்கள் நோக்கி.. எடப்பாடி பழனிசாமியின் 2ம் கட்ட சுற்றுப்பயணம்!
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் தமிழகத்தில் மும்முரமாக நடந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி
திமுக சார்பில் தேர்தல் பணிகளையும், பரப்புரைகளையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்ட நிலையில், இப்போது எடப்பாடி பழனிசாமியும் களத்துக்கு வந்துள்ளார். எம்ஜிஆர் காலம் முதலே அதிமுகவுக்கு அதிகம் கைகொடுப்பது கொங்கு மண்டலமும், தென்மண்டலமும்தான்.
ஓபிஎஸ், தினகரன் சலசலப்பால் தென்மண்டலத்தில் இப்போது அதிமுக சற்று சுணக்கமாக உள்ளது. இதனால் கொங்கு மண்டலமான கோவையிலிருந்து தனது ‘மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தில், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மக்களை சந்தித்து வருகிறார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தில் தென்மாவட்டங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்தச் சுற்றுப்பயணம் அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
2ம் கட்ட சுற்றுப்பயணம்
2026 தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி புதிய கட்சிகள் வரை மாநாடு, பேரணிகள் என ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவும் களத்துக்கு வந்துள்ளதால் அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை ஜுலை 24 ஆம் தேதி தொடங்க உள்ளார்.
ஜூலை 24 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தனது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ளார். ஜூலை 25 ஆம் தேதி, புதுக்கோட்டையில் உள்ள விராலிமலை, புதுக்கோட்டை மற்றும் திருமயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.
ஜூலை 26 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார். ஜூலை 30 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.
தொண்டர்கள் உற்சாகம்
ஜூலை 31 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார். ஆகஸ்ட் 1 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார். ஆகஸ்ட் 4 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.
ஆகுஷ்டி 5 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார். குஸ்தி 6 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான ஆகஸ்ட் 8 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.