இந்தியா கூட்டணி நாட்டை ஆளப்போவது உறுதி - கதிர் ஆனந்த் திட்டவட்டம்!

Tamil nadu DMK Durai Murugan Vellore Lok Sabha Election 2024
By Sumathi Apr 05, 2024 07:09 AM GMT
Report

பாஜக அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கதிர் ஆனந்த் கூறியுள்ளார்.

 கதிர் ஆனந்த்

வரும் மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வேலூரில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற கதிர் ஆன்ந்த்,

kathir ananth

இரண்டாவது முறையாக அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் பகுதியில் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது பேசிய அவர், "மக்களாகிய நீங்கள் எனக்கு வாக்களித்து, என்னை மீண்டும் வெற்றி பெறச் செய்தால் குடியாத்தம் நகரில் உள்ள முக்கிய இரண்டு பிரச்சனைகளை தீர்ப்பேன்.

இந்தியா கூட்டணி

தென்குளக்கரை பகுதியில் உள்ள பழைய காய்கறி சந்தையை இடித்து விட்டு புதிதாக மூன்று அடுக்குகள் கொண்ட வளாகம் அமைத்து தரப்படும். இதனால் வேளாண் பொருட்கள் விற்பனை செய்பவர்களின் வாழ்க்கை மேம்படும். அதேபோல, நகராட்சியில் உள்ள குப்பை பிரச்சனையை தீர்க்க அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி நாட்டை ஆளப்போவது உறுதி - கதிர் ஆனந்த் திட்டவட்டம்! | Dmk Kathir Ananth Election Campaign Vellore

மேலும், அதிமுகவிடம் நேஷனல் அஜெண்ட்டா என்பதே கிடையாது. அவர்களது தொண்டர்களே கட்சியின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். பாஜகவிற்கு தமிழ்நாட்டில் கால்களே கிடையாது. திமுகதான் தேரோட்டமாக சென்று கொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளாக எம்பியாக இருந்துள்ளேன்.

அழிவுப்பாதையில் பாஜக

தொகுதிக்காக அதிகமாக செய்துள்ளேன் அந்த நம்பிக்கையில் தான் வாக்கு சேகரிக்கிறேன். வடநாட்டில் இருக்கும் எனது நண்பர்கள் பலர் பாஜக 100க்கும் குறைவான இடங்களைத் தான் வெல்லும், இந்தியா கூட்டணிதான் வெல்லும் என்கின்றனர். டோல்கேட் கட்டணத்தை உயர்த்தி, தேர்தலையொட்டி ஒரு நாளுக்குள் குறைக்கின்றனர்.

தலைமைக்கு கிடைத்த ரிப்போர்ட்; மீண்டும் களமிறங்கிய கதிர் ஆனந்த் - பின்னணி என்ன!

தலைமைக்கு கிடைத்த ரிப்போர்ட்; மீண்டும் களமிறங்கிய கதிர் ஆனந்த் - பின்னணி என்ன!

அதிலேயே தெரிகிறது பாஜகவின் பயம். நாங்கள் திட்டங்களை கூறி வாக்கு கேட்கிறோம். மோடி திமுகவை அழிப்போம் எனக் கூறி வாக்கு கேட்கிறார். ஆக்கப்பூர்வமான திட்டங்களை கொண்டுவருவது தான் திமுக. ஜனநாயகப்போரின் படி நாங்கள் ஜெயிப்பது உறுதி. இந்தியா கூட்டணி நாடாளப்போவது உறுதி என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.