கனமழை.. தண்ணீர் தேங்கவில்லையா..திமுக அரசு காரணமில்லை - ஜெயக்குமார் தாக்கு!

Tamil nadu ADMK DMK Chennai D. Jayakumar
By Swetha Oct 17, 2024 02:32 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

ஜெயக்குமார் 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது.இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கனமழை.. தண்ணீர் தேங்கவில்லையா..திமுக அரசு காரணமில்லை - ஜெயக்குமார் தாக்கு! | Dmk Is Not Reason For Water Stagnation Jayakumar

இந்த நிலையில் வட சென்னை பகுதியில் மழை, வெள்ள பாதிப்புப் பகுதிகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் தண்ணீர் தேங்காததுதான் வெள்ளை அறிக்கை என உதயநிதி ஸ்டாலின் சிறுபிள்ளைத்தனமாக கூறியுள்ளார்.

இதனை பொறுப்புள்ள துணை முதல்வர் கூறும் பதிலாக எடுத்துக்கொள்ள முடியாது. தண்ணீர் தேங்காமல் இருந்ததற்கு திமுக அரசின் எடுத்த நடவடிக்கைகள் காரணம் அல்ல. மழை குறைவாக பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் சென்றுவிட்டது.

ரெட் அலெர்ட் கொடுத்த இன்றைய தினம் கடும் மழை பெய்திருந்தால் திமுக அரசின் சாயம் வெளுத்திருக்கும்.அம்மா உணவகத்தில் உணவு இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். ஆனால், வெறும் 300 பேருக்கு மட்டும் உணவு தயாரித்து விநியோகித்துவிட்டு

சென்னைக்கு ரெட் அலெர்ட்; ஆனால் ஒரு துளி மழை இல்லை - அன்புமணி விமர்சனம்

சென்னைக்கு ரெட் அலெர்ட்; ஆனால் ஒரு துளி மழை இல்லை - அன்புமணி விமர்சனம்

கனமழை..

பல இடங்களில் அம்மா உணவகங்களை 12 மணியுடன் மூடிவிட்டார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கூட மழையால் மக்கள் புலம்புகிறார்கள். ஆளுநர் அரசை பாராட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, “ஆளுநரும் அரசும் ஒன்றாகிவிட்டார்கள்.

கனமழை.. தண்ணீர் தேங்கவில்லையா..திமுக அரசு காரணமில்லை - ஜெயக்குமார் தாக்கு! | Dmk Is Not Reason For Water Stagnation Jayakumar

நேற்று வரை ஆளுநர் ஒழிக என்று சொன்னவர்கள் இன்று ஆளுநர் வாழ்க என்று சொல்லும் அளவுக்கு அரசு நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. டெல்லியில் ஆளுநரை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள் என ஸ்டாலினிடம் சொல்லி இருப்பார்கள்.

இதனை ஏற்று ஆளுநரிடம் இனி அனுசரித்துப் போவதாக பிரதமரிடம் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன் முதல் கட்டமாகவே பொன்முடியை உயர்கல்வித் துறையில் இருந்து மாற்றினர்” என்று தெரிவித்துள்ளார்.