சென்னைக்கு ரெட் அலெர்ட்; ஆனால் ஒரு துளி மழை இல்லை - அன்புமணி விமர்சனம்

Anbumani Ramadoss Chennai TN Weather
By Karthikraja Oct 16, 2024 08:30 PM GMT
Report

வானிலை அறிவிப்பில் துல்லியமில்லை என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

 ரெட் அலெர்ட்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்ததையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது.

chennai rain

இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று சில பகுதிகளில் மிதமான மழையே பெய்துள்ளது.

பொதுமக்கள் நிம்மதி; ஆனால் அந்த விசயத்தில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது - ராமதாஸ்

பொதுமக்கள் நிம்மதி; ஆனால் அந்த விசயத்தில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது - ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இந்நிலையில் வானிலை அறிவிப்பு துல்லியமில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வானிலை முன்னறிவிப்பு ரெட் அலெர்ட் வழங்கியிருந்தது. 

anbumani ramadoss

ஆனால், இன்று மாலை வரை ஒரு சொட்டு மழை கூட இல்லை. அரசும், மக்களும் தயாராக இருக்க வானிலை அறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார். 

வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை(17.10.2024) அதிகாலை காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்க உள்ள நிலையில் சென்னைக்கு ரெட் அலெர்ட் தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.