மூச்சு திணறடித்து கொலை - முன்னாள் திமுக எம்பி கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்!
முன்னாள் திமுக எம்பி மஸ்தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொலை
திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. மஸ்தான்(66). சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.
அவரது தம்பி மருமகன் இம்ரான் பாஷா(26) காரை ஓட்டிச் சென்றார். தொடர்ந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், இம்ரான், நான் டாக்டர். மஸ்தானின் நெருங்கிய உறவினர் என்பதால் அவரிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன்.
5 பேர் கைது
அவரிடம் 15 லட்சம் பணம் வாங்கியிருந்தேன். இந்நிலையில், மஸ்தானின் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த காரணத்தினால் பணத்தை திரும்ப கேட்டு அழுத்தம் கொடுத்தார். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து நண்பர்கள் தமீம் என்கிற சுல்தான், நசீர்(38), தவுபிக் அகமது (31) மற்றும் லோகேஸ்வரன்(21) ஆகியோருடன் சேர்ந்து
காரில் உட்காந்திருந்த மஸ்தானின் கைகளை பின்புறமாக இழுத்து பிடித்துக் கொண்டார். உடனே சுல்தான் அவரது வாய் மற்றும் மூக்கை அழுத்திப் பிடித்து மூச்சு திணறல் ஏற்படுத்தி மஸ்தானை கொலை செய்தோம் எனக் கூறியுள்ளார்.
அதனையடுத்து 5 பேரையும் கைது செய்துள்ளனர்.