போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி - அதிரடி காட்டிய துரைமுருகன்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நிரந்தமரக நீக்கபட்டுள்ளார்.
போதை பொருள்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்துவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் கடந்த 24 ஆம் தேதி சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.92 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற மூன்று பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
திமுக
இதன் மதிப்பு 70 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் பிரிவு துணைத்தலைவர் சையது இப்ராஹிம் என்பது தெரிவந்தது.
மேலும் இப்ராஹிம், மன்சூர் சென்னை செங்குன்றம் பகுதியில் சேர்ந்த வர்கள் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது.
இந்த நிலையில் , ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் பிரிவு துணைத்தலைவர் சையது இப்ராஹிம் திமுகவில் இருந்து நிரந்தமரக நீக்கி திமுக பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.