பாஜகவில் இணையும் டி.ஆர்.பாலுவின் மகள்? திமுகவிற்கு ஷாக் கொடுக்கும் பலே திட்டம்!
டி.ஆர்.பாலுவின் மகள் பாஜகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
டி.ஆர்.பாலு
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போது திமுகவின் பொருளாளராக இருப்பவர் டி.ஆர்.பாலு. டெல்லியில் அதிக செல்வாக்கோடும், கட்சி ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும் செயல்பட்டவர் என்ற பெயரை பெற்றவர்.
இவரது முதல் மனைவியின் மகள் மனோன்மணி... தற்போது டிஆர் பாலுவுடன், இவருக்கு இணக்கமான உறவு இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இவரை பாஜகவுக்குள் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருகிறது.
திட்டம் தீட்டும் பாஜக
டி.ஆர்.பி.ராஜாவுக்கு எதிராக மனோன்மணியை நிறுத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யாவை பாஜகவில் இணைத்து திமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.