விஜய் போட்டியிடும் தொகுதியில் நேரடியாக களமிறங்கும் திமுக! வெற்றி யாருக்கு?
சட்டப்பேரவை தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதியில் நேரடியாக திமுக-வே களமிறங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 2ம் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என கூறப்படும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி, NDA கூட்டணி, தவெக களம் காண்கிறது.
தேமுதிகவும் ராமதாஸ் தலைமையிலான பாமகவும் யாருடன் கூட்டணி வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெல்லலாம் என முக்கிய நிர்வாகிகளிடம் தொடர் ஆலோசனை நடந்து வருகிறது.
சென்னையில் இரண்டு தொகுதிகள் விருகம்பாக்கம். வேளச்சேரி, திருச்சியில் ஒரு தொகுதி, வட மாவட்டத்தில் ஒரு தொகுதி என இறுதிச் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதில் சென்னை தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் களமிறங்கும் தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாம், இதனால் அத்தொகுதியில் போட்டி பலமாக இருக்கும்.
கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், யாருக்கு எந்த தொகுதி என்பதை திமுக-வே இறுதி செய்யும் என கூறப்படுகிறது.
