யாருடன் கூட்டணி? காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை

Rahul Gandhi
By Fathima Feb 10, 2026 04:10 AM GMT
Report

திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து இதுவரையிலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகாததால் குழப்பங்கள் நீடித்துக்கொண்டிருக்கிறது.

அரசு அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், கனிமொழி எம்பி ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

திமுக தேர்தல் குழு அமைக்கப்படும் என அறிவித்த போதும், தாமதம் காட்டி வருகிறது.

யாருடன் கூட்டணி? காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை | Rahul Gandhi To Consult With State Leaders Today

இந்நிலையில் இன்று டெல்லியில் ராகுல்காந்தி, கார்கே, வேணுகோபால் ஆகியோர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 41 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா சீட் கேட்பதாக கூறப்படுகிறது.

மேலும் தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது, குறிப்பாக திமுகவை விமர்சிக்கும் வகையில் பேசப்படும் கருத்துகளை திமுக தலைமை விரும்புவதில்லை.

அவைக்கு வராத பிரதமர் மோடி : நான் பேசியதை கண்டு பயந்துவிட்டாரா? - ராகுல் காந்தி

அவைக்கு வராத பிரதமர் மோடி : நான் பேசியதை கண்டு பயந்துவிட்டாரா? - ராகுல் காந்தி


இதன் காரணமாகவும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தி காங்கிரஸை வழிக்கு கொண்டு முயற்சிக்கிறதாம் திமுக.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

யாருடன் கூட்டணி? காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை | Rahul Gandhi To Consult With State Leaders Today