அகில இந்திய வானொலிக்கு பதில் ஆகாஷ்வாணி, ஹிந்தியில் மாற்றுவதா? - தி.மு.க கண்டனம்!

DMK
By Vinothini May 08, 2023 06:15 AM GMT
Report

ஆல் இந்திய ரேடியோவின் பெயரை ஆகாஷ்வாணி என்று ஹிந்தியில் மாற்றுவதை கண்டித்து மத்திய அரசுக்கு தி.மு.க கண்டனம் தெரிவித்துள்ளது.

பெயர் மாற்றம்

அகில இந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் மற்றும் அலுவல் சார்ந்த கடிதங்களில், இனி ஆல் இந்தியா ரேடியோ என்று பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்று தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டது.

dmk-condemn-letter-to-central-minister

இதனை எதிர்த்து தமிழ்நாட்டு தலைவர்கள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்தனர். தற்போது இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

எதிர்ப்பு கடிதம்

தொடர்ந்து, அந்த கடிதத்தில், "அகில இந்திய வானொலியை 'ஆகாஷ்வாணி' என்று இந்தியில் மட்டும் பயன்படுத்தும் உத்தரவு தேவையில்லாத ஒன்று .

dmk-condemn-letter-to-central-minister

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில வானொலிகளில் அகில இந்திய வானொலி, ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலச் செய்திகளில் அகில இந்திய வானொலி என்றும், ஆங்கில செய்திகளில் ஆல் இந்தியா ரேடியோ என்றும் பயன்படுத்தப்படுகின்றன. வானொலி என்பது ஆகாஷ்வாணி என்ற வார்த்தையின் தமிழ் சொல்லே ஆகும் .

இதை மாற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் தேவையில்லாதவை. ஒன்றிய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாட்டில் பொதுமக்கள் இடையேயும், அரசியல் கட்சியினர் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தலையிட்டு, முன்பிருந்த நிலையே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.