ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணித்த திமுகவின் கூட்டணி கட்சிகள்
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
தேநீர் விருந்து
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேநீர் விருந்தை புறக்கணித்துவிட்ட விசிக, ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டிர்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
புறக்கணிப்பு
அவர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. எனவே புறக்கணிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மேலும் மதிமுகவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ அறிவித்துள்ளார்.