ஆளுநர் விருந்து புறக்கணிப்பு , சூடு பிடிக்கும் அரசியல் களம் : ஆளுநருக்கும் தமிழக அரசுக்குமான மோதல் தொடங்கிவிட்டதா ?
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இது வரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் ஆளுநர் ரவி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று வைக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள போவதில்லை என மார்க்சிஸ்ட்,விசிக,மமக உள்ளிட்ட கட்சிகள் கூறியுள்ளது. இந்த நிலையில் , அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து அதில் பேசப்பட்டும் என கூறப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு : நீட் விலக்கு மசோதா தொடர்பாக மார்ச் 15 ஆம் தேதி ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் வலியுறுத்தினார்.
டெல்லிக்கு செல்லும் போதும் பிரதமர், உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதற்கு பிறகும் கூட ஆளுநர் நீட்டிற்கு விலக்கு கோறும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் சட்டமன்ற மாண்பு கேள்விக்குறியாகியுள்ளதாக கூறிய அமைச்சர தங்கம் தென்னரசு.
ஆளுநரின் இந்த நடவடிக்கை வருத்தமளிப்பதாகவும் ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாது என்றும். முதலமைச்சரும் பங்கேற்க மாட்டார் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஏற்கெனவே ஒரு உரசல் போக்கு நீடித்து வந்தது.
அது பொதுவெளியில் பெரிதாக வெடிக்காத நிலையில் தற்போது முதன்முறையாக வெளிப்படையாக தெரியவந்துள்ளது. ஏற்கெனவே திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில், 208 நாட்களுக்கு பிறகு ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை காமாலை கண்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து ஒரே வாரத்தில் அந்த மசோதா எந்த திருத்தமும் இல்லாமல் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆஅளுநருக்கு அனுப்பப்பட்டது அதன்பிறகு குடியரசுத்தலைவருக்கு அனுப்புங்கள் என் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுநரை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டார்.
அப்போது டெல்லிக்கு அனுப்பி விடுவதாக ஆளுநர் உறுதியளித்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் நீட் உட்பட 11 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் இன்று திடீரென நேரில் சந்தித்து பேசினர்.
ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சு ஆகியோர்கள் இன்று நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். அப்போது பேசிய அவர்கள், நூற்றாண்டு கண்ட தமிழக சட்டமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில் ஆளுநர் நடந்து வருவதாக குற்றமசாட்டினர்.
ஜணாநாயக மரபுப்படி செயலபடும் மிக உயர்ந்த அமைப்பான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மதிப்பு தரப்படவில்லை. நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் இருப்பதாக மட்டுமே ஆளுநர் தெரிவித்தார்,
மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்க்கான காலவரையை ஆளுநர் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதனிடையே பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கலந்துக் கொள்ளும் என கூறியுள்ளன.
நிர்வாகம் சார்ந்த 11 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதல் இல்லாததால் கிடப்பில் உள்ளன, தற்போதைய சூழ்நிலை போலவே 1994-95ல் ஜெயலலிதா ஆட்சிக்ககாலத்தில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியுடம் மோதல் போக்கு ஏற்பட்டது.
அப்போது தேநீர் விருந்தை புறக்கணித்தார் ஜெயலலிதா. இப்போது பஞ்சாப் ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக இருந்தவரையில் திமுக அரசுடன் பெரிதாக மோதல் போக்கு இருக்கவில்லை. அவருக்கு பிறகு வந்த ஆர். என் ரவியுடன் தற்போது நீண்ட காலத்திற்கு பிறகு உரசல் என்பது வெடித்துள்ளது.
முன்னதாக நாடாளுமன்றத்திலும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டுமென திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மஹராஷ்டிரா, மேற்கு வங்கம் கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தற்போது தமிழக அரசியலும் இதே நிலை நீடித்து வருவது திமுக பாஜக மறைமுக மோதல் தொடங்கிவிட்டதாகவே கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.