ஆளுநர் தேநீர் விருந்து - திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
ஆளுநர் தேநீர் விருந்து
சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தேநீர் விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், முக்கிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
காங்கிரஸ்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிற செயலை தொடர்ந்து செய்து வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அறிக்கை
— Selvaperunthagai K (@SPK_TNCC) August 13, 2024
தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கிற வகையில் இந்த முடிவு… pic.twitter.com/BJpIUeDW2v
"கூட்டாட்சியை, அரசியலமைப்பை மதிக்காத ஆணவப்போக்கு கொண்ட ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியில் நீடித்திருப்பதே இழுக்கு எனும் நிலையில் அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருடைய அழைப்பை மீண்டும் நிராகரிக்கிறது." என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கு.பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விசிக
“சுதந்திர தினத்தையொட்டி மேதகு ஆளுநர் வழக்கம்போல அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அழைப்பு விடுத்தமைக்கு எமது நன்றி. எனினும், ஆளுநர் அவர்களின் தொடர் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகளின் காரணமாக இந்த நிகழ்வை விசிக புறக்கணிக்கிறது.” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி மேதகு ஆளுநர் வழக்கம்போல அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அழைப்பு விடுத்தமைக்கு எமது நன்றி.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 13, 2024
எனினும், ஆளுநர் அவர்களின் தொடர் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகளின் காரணமாக இந்த நிகழ்வை…
மாநில அரசுக்கு எதிராகவும், சட்டமன்றத்தில் நீட் விலக்கு வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமலும் ஆளுநர் இருப்பதால் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.