கைய பிடிச்சு இழுத்தா வராதவ.. கண் அடிச்சா மட்டும் வரவா போறா - கூட்டணி குறித்து துரைமுருகன்!
தேசமே என் குடும்பம் என்று கூறி பிரதமர் மோடி தேச அரசியல் செய்வதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன்
வேலூர் நாடாளுமனற தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சென்னையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது வெள்ளப் பாதிப்பு தொடர்பான பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர் "வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியவர்களுக்கு தான் அதைப்பற்றி பேச உரிமை இருக்கிறது. வானத்தில் பறந்து வந்து கூட பார்க்காதவர்களுக்கு அதைப் பற்றி பேச உரிமை இல்லை.
தேச அரசியல்
மற்றவர்கள் எல்லாம் குடும்ப அரசியல் என்று சொல்லிவிட்டு, தேசமே என் குடும்பம் என்று கூறி தேச அரசியல் செய்கிறார் மோடி. திமுக கூட்டணிக்கு எந்த பாதகமும் இருக்காது.
விரைவில் கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியும்" என்றார். மேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக அழைப்பு விடுக்கிறதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் "ஒரு படத்தில் நான் கேள்வி பட்டேன். கைய பிடிச்சு இழுத்தா வராதவ கண் அடிச்சா மட்டும் வரவா போறா என்ற வசனம் வரும். அது மாறி யாரும் கண் அடிச்சாலும் வரமாட்டாங்க... கை பிடிச்சு இழுத்தாலும் வரமாட்டாங்க" என்று கூறினார்.