பிரேமலதா ஆர்ப்பாட்டம்; உணவை சாப்பிட்ட மக்கள் வாந்தி, மயக்கம் - பரபரப்பு!

Tamil nadu DMDK
By Sumathi Aug 11, 2023 07:34 AM GMT
Report

மிஞ்சிய உணவை சாப்பிட்டவர்களுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டம்

விருத்தாச்சலத்தில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அதில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

பிரேமலதா ஆர்ப்பாட்டம்; உணவை சாப்பிட்ட மக்கள் வாந்தி, மயக்கம் - பரபரப்பு! | Dmdk Protest After Eating Food People Hospital

தொடர்ந்து, அங்கு மீதமான தக்காளி சாதத்தை தனது முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு எடுத்து வந்த கட்சி பிரமுகர் ஒருவர் அங்கிருந்தவர்களுக்கு கொடுத்துள்ளார்.

வாந்தி, மயக்கம்

அதனை சாப்பிட்ட பெரியவர்கள், சிறியவர்கள் உட்பட 25 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.