தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது? - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி..!
தேமுதிக எந்தக் கூட்டணியிலும் இடம்பெறவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான பணியை அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளன. அந்த அடிப்படையில் தேமுதிகவும் மக்களவைத் தேர்தல் பணியைத் தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி யாருடன்?
மேலும் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தற்போதைக்கு எந்த கூட்டணியிலும் தேமுதிக இடம்பெறவில்லை.
எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.