யாருடன் கூட்டணி? உறுதியாக பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த்
கூட்டணி குறித்த தகவலை பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் மிகப்பெரிய மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து எல்லா முடிவுகளையும் அறிவிப்போம். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.மக்களின் வரிப்பணத்தை லஞ்சமாகவோ, ஊழலாகவோ பயன்படுத்தினால், கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.
கூட்டணி
கேப்டன் கூறியபடி லஞ்சம், ஊழல் இல்லாத நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நீட் தேர்வு, டாஸ்மாக் ஒழிப்பு, விலைவாசி குறைப்பு எனப் பல வாக்குறுதிகளை ஆளும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை. இன்னும் தேர்தலுக்கு எட்டு, ஒன்பது மாதங்கள் இருக்கின்றன.
அதற்குள் அவர்கள் ஏதாவது செய்வார்களா என்று பார்ப்போம். அப்படிச் செய்யவில்லை என்றால், மக்கள்தான் எஜமானர்கள்; 2026-ல் நல்ல தீர்ப்பைக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.