திமுக கூட்டணியை விட்டு திருமா வெளியே வரணும் - நயினார் நாகேந்திரன் விருப்பம்
திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியே வரவேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாஜக- அதிமுக கூட்டணி உடைய வேண்டுமென திருமாவளவன் விருப்பப்படுகிறார்.
ஆனால் அவர் திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியே வரவேண்டும் என நான் விருப்பப்படுகிறேன். நடக்குமா என்பதை பின்னர் பார்க்கலாம்.
நயினார் விருப்பம்
அன்புமணியும், ராமதாஸும் இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அமலாக்கத்துறை என்ற பெயரைக் கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை.
மேலும், தமிழ்நாடு பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக் கூடாது. எக்ஸ் தளத்தில் அண்ணாமலை படத்துடன் இயங்கி வரும் 15 கணக்குகள், அண்ணாமலைக்கு ஆதரவாகவும்,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பதிவிட்டு வருவதாக கூறிய அவர், பாஜகவினரின் சோசியல் மீடியா செயல்பாடுகளை கண்காணிக்க குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் பிரணிதா சுபாஷ்... Cannes விழாவுக்கு எப்படி போயிருக்காங்க பாருங்க Manithan
