அமைச்சர் உதயநிதியை சந்தித்த டி.கே.சிவகுமார் - இதுதான் காரணமா? வெளியான தகவல்!
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்துப் பேசினார்.
சென்னை
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஒரு நாள் பயணமாக சென்னைக்கு வந்தார். சென்னையில் இயங்கும் பல்வேறு திட்டங்களைப் பற்றிய தகவல்களைப் பெற, அவர் கர்நாடக அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், சென்னையின் பசுமைவழிச் சாலையில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்று, அவருடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கலந்தாலோசனை மேற்கொண்டார்.
உதயநிதி
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்ய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார் .
அவரை மேயர் பிரியா, துணை மேயர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர் . திட்டங்கள் குறித்து டி.கே.சிவக்குமாரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்