ஹனிமூன் போன இடத்துல...நாள் முழுக்க அழுவேன்- அவ்ளோ டென்ஷன்..! Anchor தியா மேனன் வருத்தம்..!

Tamil Actress
By Karthick Jan 18, 2024 02:45 PM GMT
Report

குழந்தை பிரசவிப்பது குறித்து தான் பட்ட கஷ்டங்களை தொகுப்பாளினி தியா மேனன் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தியா மேனன் 

தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக வளம் வந்தவர் தியா மேனன். இடையில் நேற்று இல்லாத மாற்றம் என்ற படத்திலும் நடித்துள்ள அவர், கிரிக்கெட்டர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

diya-menon-shares-her-pregnancy-struggles

இவர்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தனியார் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் தியா மேனன் சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலமாகவுள்ளார். இவர் தான் குழந்தை பெற்றுக்கொள்வதை குறித்து எதிர்கொண்ட இன்னல்களை அண்மை பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசியுள்ளார்.

நீண்ட நாள் ரகசியம்..!! ஆண்ட்ரியாவிடம் அது தான் பிரச்சனையே..? ஓப்பனாக சொன்ன அனிருத்..!

நீண்ட நாள் ரகசியம்..!! ஆண்ட்ரியாவிடம் அது தான் பிரச்சனையே..? ஓப்பனாக சொன்ன அனிருத்..!

அந்த பேட்டியில், 22 23 வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டதால் தானும் கணவரும் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்வதை, இரண்டு மூன்று வருடங்கள் தள்ளி போட்டோம் என்று கூறிய அவர், ஆனால், அங்கு தான் மிகப்பெரிய ஒரு இடி வந்து விழுந்தது என்று கூறினார். 

நாள் முழுக்க அழுவேன்...

ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தாங்கள் ஹனிமூன் சென்ற போது, நினைத்த நேரத்தில் குழந்தை ஃபார்ம் ஆகவில்லை என்ற தியா, அதனை தொடர்ந்து தாங்கள் குழந்தைக்காக முயற்சி செய்து கொண்டே இருந்தோம் என்றும் வீட்டாரின் தரப்பிலிருந்து இது குறித்தான கேள்விகள் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும், அவர்களிடம் அவர்களுக்கு தெரிந்தவர்கள் இது குறித்தான கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.  

பார்க்கணும்னா பாத்துக்கோ...நா அதுக்கெல்லாம்...!! வெளிப்படையாக சொன்ன பாக்கியலட்சுமி ரேஷ்மா

பார்க்கணும்னா பாத்துக்கோ...நா அதுக்கெல்லாம்...!! வெளிப்படையாக சொன்ன பாக்கியலட்சுமி ரேஷ்மா

அது வருத்தத்தையும், மன அழுத்தத்தையும் கொடுத்ததாக தெரிவித்த அவர், அந்த டென்ஷன் கடைசி வரை இருந்தது என்று கூறி, ஒரு கட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்து விட்டு போகட்டும் என்று நினைத்து விட்டதாக தெரிவித்தார்.

diya-menon-shares-her-pregnancy-struggles

கர்ப்ப பரிசோதனை செய்த அன்று எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை என்றால் நாள் முழுக்க உட்கார்ந்து அழுவேன் என்று வேதனையுடன் தெரிவித்த தியா மேனன், ஆனால் தான் எதிர்பாராத ரிலாக்ஸான தருணத்தில்தான் கர்ப்பம் தரித்தாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.