தீபாவளிக்கு சொந்த ஊருக்கு ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கலை'யா? ரயில்வே துறையின் அறிவிப்பு

By Karthick Jul 01, 2024 09:39 AM GMT
Report

இன்று காலை துவங்கிய சில நிமிடங்களிலேயே தீபாவளி பண்டிகைக்கான சென்னையிலிருந்து புறப்படும் விரைவு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு முடிந்தது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி இந்தியா முழுவதுமே கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். நாட்டின் பல பகுதிகளிலும் வேலை செய்து வரும் மக்கள் தங்களின் வீடுகளை, சொந்தங்களை நோக்கி பயணிப்பார்கள்.

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கலை

அவர்களுக்கு வசதியாக பல ரயில்கள் வருடாவருடம் இயக்கப்பட்டு வருகின்றது. அப்படி இந்த ஆண்டிற்கான சென்னையில் இருந்து புறப்படும் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை துவங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் இந்த ரயில்களில் முன்பதிவானது சில நிமிடங்களிலேயே முடிந்து waiting list'இற்கு வந்துள்ளது.

அறிவிப்பு 

அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, அதாவது அக்டோபர் 29ஆம் தேதி புறப்படும் ரயிலின் டிக்கெட் விற்று தீர்ந்துள்ளது.

சென்னை கன்னியகுமார் ரயில் பயணிகள் ஆத்திரம் - நடுவழியில் நின்ற ரயில்!! அதிர்ந்த ரயில் அதிகாரிகள் !!

சென்னை கன்னியகுமார் ரயில் பயணிகள் ஆத்திரம் - நடுவழியில் நின்ற ரயில்!! அதிர்ந்த ரயில் அதிகாரிகள் !!

சென்னையிலிருந்து திருநெல்வேலி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி,நாகர்கோவில், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ரயில்களின் முன்பதிவு நடைபெற்றது.

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு ஊருக்கு போக டிக்கெட் கிடைக்கலை

டிக்கெட் விற்பனை சற்று நேரத்தில் விற்று தீர்ந்த நிலையில், அக்டோபர் 30ஆம் தேதி இயங்கும் ரயில்களுக்கு நாளையும், அக்டோபர் 31ஆம் தேதி செல்லும் ரயில்களுக்கு நாளை மறுநாள், அதாவது புதன்கிழமையும் முன்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.