சென்னை கன்னியகுமார் ரயில் பயணிகள் ஆத்திரம் - நடுவழியில் நின்ற ரயில்!! அதிர்ந்த ரயில் அதிகாரிகள் !!
சென்னை கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன்பதிவு பேட்டிகளை ஏராளமானோர் ஆக்ரமித்து பயணம் செய்ததால், பலரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ரயில் பயணம்
வடமாநிலங்களில் முன்பதிவு பேட்டிகளை பலரும் ஆக்ரமித்து பயணிப்பது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. பெரும்பாலும் வடமாநிலத்தவரைகளையே இது போன்ற செய்திகள் குறிவைத்து தென்னிந்தியாவில் வெளியிடப்பட்டு வந்தாலும், இங்கும் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று தான் வருகின்றது.
அப்படி சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன்பதிவு பேட்டிகளை பலரும் ஆக்ரமித்து பயணித்து தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது. சென்னையில் இருந்து நேற்று மாலை, கன்னியகுமாரிக்கு புறப்பட்ட விரைவு ரயில், தாம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்தது.
அப்போது பலரும் முண்டியடித்து கொண்டு ரயிலில் ஏறி முன்பதிவு பேட்டிகளை ஆக்ரமித்தனர்.
ஆத்திரமடைந்த பயணிகள்
முன்பதிவு செய்த்தவர்கள் இதன் காரணமாக, தங்களின் பேட்டிகளில் ஏற முடியாமல், வெவ்வேறு பெட்டிகளில் ஏறி பயணித்திருக்கிறார்கள். இது தொடர்பாக புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இன்று குரூப் 4 தேர்வு நடைபெறும் நிலையில், ரயில்களில் அதிகப்படியான கூட்டம் இருந்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக பொறுமையிழந்து விருத்தாச்சலம் அருகே சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
ரயில் அதிகாரிகள், சாதாரண டிக்கெட் எடுத்து பயணித்தவர்களை இறக்கிவிட, அதன் பிறகு சிறிது நேரம் காலதாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.