தீபாவளி என்றாலே பட்டாசு, பலகாரம் தான்.. இந்த பாரம்பரிய உணவுகளை மிஸ் பண்ணிடாதீங்க!
பண்டிகை நாளில் இந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழுங்கள்.
தீபாவளிபண்டிகை
தமிழ்நாடு முழுவதும் வரும் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் புத்தாடைகள் வாங்குவதும் பலகாரங்கள் செய்வதுமாக தீபாவளிக்கு ரெடியாகி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் நாட்கள் உள்ள நிலையில் எங்கும் பட்டாசு சத்தம் காதை கிழிகிறது, இரவில் வண்ணமயமான வாணவேடிக்கையுடன் கலைக்கட்டுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கலுக்கு நிகராக கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி என்பதால், வெளியூர்களில் வேலைக்காகவும், படிப்புக்காகவும் சென்றுள்ளவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகை நரகாசுரனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படுகிறது.
அலங்காரம்
ரங்கோலி இந்திய வரலாற்றில் மிகவும் பழமையான பாரம்பரியம். இந்த பண்டிகை நாளில், வீட்டில் அழகான ரங்கோலிகளைப் போடலாம். அதுமட்டுமின்றி வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கவும்.
இந்த தீபாவளி பண்டிகையில் உங்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விளக்குகளால் அலங்கரிக்கலாம். தீபாவளியின் போது, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏதாவது ஒன்றை பரிசளிக்க திட்டமிடலாம், இதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த கொண்டாட்டத்தை நினைவில் கொள்கிறார்கள்.
பாரம்பரிய உணவுகள்
தீபாவளியின் பொழுது முந்தைய காலங்களில் வீட்டில் பலகாரங்கள் செய்து அக்கம் பக்கத்தினருடன் அவற்றை பகிர்ந்து கொள்வது தான் வழக்கம். பாரம்பரியமாக நம் நாட்டில் செய்வது முறுக்கு, சீடை, செட்டிநாடு உக்கரை, அதிரசம், அல்வா, குலாப் ஜாமுன் போன்றவை. இவற்றை ஈசியா சுவையாக செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
முறுக்கு
தீபாவளி பலகாரம் என்றாலே முதலிடம் பெறுவது முறுக்குதான். முறுக்கு எப்படி சுவையாகவும், பதமாகவும் சுடுவது என்று பார்க்கலாம். தண்ணீர் - 1 கப், உப்பு - 1/2 tsp, நெய் - 2 tsp, அரிசி மாவு - 1 கப், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கருப்பு எள் -1 tsp, மிளகாய் தூள் - 1 tsp இவற்றை சேர்த்து பதமாக முறுக்கு மாவு செய்து முறுக்கு குழாயில் வைத்து பதமாக எண்ணையில் போட்டு எடுக்க வேண்டும்.
அல்வா
முழுவதும் கோதுமை கொண்டு செய்யப்படும் அல்வா, இது உடலுக்கு வலுவையும் ஒரு வித புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. கோதுமை மாவு, சக்கரை, நெய் வைத்து செய்யவேண்டும்.
சீடை
தீபாவளி பலகாரம் லிஸ்டில் முக்கிய இடம் பிடிக்கும் இனிப்பு சீடை எப்படி செய்வது என்று பார்க்கலாம். பச்சரிசி - 1 1/2 கப், தேங்காய் துருவியது - 1/2 கப், கருப்பு வெல்லம் - 1 கப், கருப்பு மற்றும் வெள்ளை எள் - 1/2 கப், எண்ணெய் - வறுக்க, நெய் - 2 ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து பதமாக எண்ணையில் சுட்டு எடுக்கவேண்டும்.
அதிரசம்
பலரது ஃபேவரைட்டான அதிரசம், பச்சரிசி - இரண்டு கப், வெல்லம் - 2 கப், நெய் - 1 ஸ்பூன், ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன், எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து பக்குவமாக தட்டி எண்ணையில் போட்டு எடுக்கவேண்டும்.
பாசிபருப்பு உக்கரை
பாசிபருப்பு மற்றும் வெல்லம் வைத்து செய்யக்கூடியது இந்த உக்கரை எனும் செட்டிநாடு பாரம்பரிய பலகாரம். பாசிபயறு – கால் கப், ரவை – 2 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், தேங்காய் – 2 ஸ்பூன், ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு,
முந்திரி – ஒன்றரை டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன், நெய் – 4 டேபிள், வெல்லப்பாகு செய்ய தேவையானவை, வெல்லம் – அரை கப், தண்ணீர் – கால் கப் ஆகியவற்றை சேர்த்து செய்து உண்ணலாம்.