தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் திரும்பி வர தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.
தீபாவளி
தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு கூடுதலாக ஒரு நாளாக தீபாவளி மறு நாளும் (01.11.2024) அரசு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும் பயணிகளுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்க வழக்கமாக இயக்கும் பேரூந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கியது.
சிறப்பு பேருந்துகள்
கடந்த நவம்பர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2.092 பேருந்துகளுடன் 4.508 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10.784 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5.76 இலட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முடித்து விட்டு, சொந்த ஊரிலிருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு திரும்பும் மக்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்க உள்ளது.
02.11.2024 முதல் 04.11.2024 தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து 3,405 பேருந்துகளும் என மொத்தம் 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.