இனி அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை - இந்தியர்கள் மகிழ்ச்சி

Diwali United States of America Festival
By Thahir Apr 28, 2023 06:20 AM GMT
Report

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுவிடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் 

இந்தியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையின் போது மக்கள் புத்தாடை உடுத்தி, வீடுகளில் இனிப்புகள் தயார் செய்து உறவினர்களுக்கு வழங்கி பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடுவர்.

Diwali is also a holiday in America

தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் வசிக்கும் இந்து மக்கள் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்கா நாட்டில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் கொண்டாடி இருந்தார்.

அமெரிக்காவில் பொதுவிடுமுறை 

இந்த நிலையில் அமெரிக்கா நாட்டில் உள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Diwali is also a holiday in America

இந்த பண்டிகையை முன்னிட்டு பொதுவிடுறை வழங்குவதற்கான சட்டத்தை அம்மாகாணத்தின் மேலவையில் செனட்டர்கள் அறிமுகப்படுத்தினர்.

பின்னர் இந்த சட்டம் பென்சில்வேனியா மாகாண மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றி இதன்மூலம் அந்த மாகாணத்தில் தீபாவளிப் பண்டிகை நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.